கோலாலம்பூர்: அம்னோ கட்சித் தலைவர் அகமது ஸாஹிட்
ஹமிடிக்கு எதிராக கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆறு தவணை நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி அப்துல் அசிஸ் அண்மையில் கருத்து தெரிவித்தார்.
அம்னோ கட்சியினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதை இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நிலை அம்னோவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மலேசிய நாடாளுமன்றத்தில் அம்னோவைச் சேர்ந்த 38
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்களில் 25 பேருடைய ஆதரவை திரு ஸாஹிட் இழந்துவிட்டதாக திரு நஸ்ரி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம்மை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆதரிக்கவில்லை என்று திரு நஸ்ரி தெரிவித்தார்.
ஆனால் அன்வார் இப்ராஹிம் பிரதமராக வேண்டும் என விரும்பும் திரு ஸாஹிட், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை
ஆதரிப்பதாக மாமன்னரிடம் பொய் கூறியுள்ளதாக திரு நஸ்ரி கூறினார்.

