இடிந்து விழுந்த கட்­ட­டம்; இந்­திய குடும்­பத்­தைக் காண­வில்லை

இடிந்து விழுந்த கட்­ட­டம்; இந்­திய குடும்­பத்­தைக் காண­வில்லை

1 mins read
7e0ea257-2dc6-452d-940b-9a02623a8e90
(இட­மி­ருந்து வலம்) விஷால் பட்­டேல், ஒரு வயது குழந்­தை­யான ஐஷாரி, பாவ்னா பட்­டேல் ஆகி­யோ­ரைக் காண­வில்லை. படம்: உமா கண்­ணையா -

மயாமி: அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா நக­ரின் தலை­ந­க­ரான மயா­மி­யில் 12 மாடி குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்று நேற்று முன்­தி­னம் இடிந்து விழுந்­ததில் குறைந்­தது நால்­வர் மாண்­டு­விட்­ட­தாக நேற்று தெரி­விக்­க­ப்பட்டது.

பலரை இன்­னும் காண­வில்லை. இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்­கும் அவர்­கள் உயி­ரு­டன் இருக்­கி­றார்­களா என்று தெரி­ய­வில்லை என அதி­கா­ரி ­கள் கவலை தெரி­வித்­த­னர்.

அவர்­க­ளைத் தேடும் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் இடிந்து விழுந்­த­தற்­காக கார­ணம் கேட்டு பாதிக்கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர். அந்­தக் கட்­ட­டத்­தில் இந்­திய வம்­சா­ளி­யைச் சேர்ந்த குடும்­பம் ஒன்­றும் வசித்து வந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிரிட்­டிஷ் மற்­றும் அமெ­ரிக்க குடி­யு­ரிமை கொண்ட 38 வயது பாவ்னா பட்­டேல், அவ­ரது கண­வ­ரான 42 வயது விஷால் பட்­டேல், அவர்­க­ளது ஒரு வயது மகள் ஐஷாரி ஆகி­யோ­ரைக் காண­வில்லை என்று அவர்­க­ளது உற­வி­னர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

பாவ்னா கர்ப்­ப­மாக இருப்­ப­தா­க­வும் அவ­ரது உற­வி­னர் ஒரு­வர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார். குடி­யி­ருப்­பா­ளர்­

க­ளின் நிலை குறித்து அதி­கா­ரி­கள் தக­வல் தெரி­விக்க வில்லை என்று உற­வி­னர்­கள் குறைகூறி­னர்.