சவாரி பலூன் தீப்பற்றியது; ஐவர் மரணம்

சவாரி பலூன் தீப்பற்றியது; ஐவர் மரணம்

1 mins read
d3eb7274-e76d-40ff-a0dd-4c9a84eeb0ec
-

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் வெப்பக் காற்று பலூன், காற்றால் மின் கம்பிகளின் மீது மோதப்பட்டு தீப்பற்றியது. இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

பலூனை ஓட்டிக்கொண்டிருந்தவரும் மூன்று பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்தனர். நான்காவது பயணி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மாண்டார்.

கீழே இருந்த யாருக்கும் காயங்கள் இல்லை.