இந்தோனீசியாவில் முன் இல்லாத அளவுக்கு கொவிட்-19 பாதிப்பு

இந்தோனீசியாவில் முன் இல்லாத அளவுக்கு கொவிட்-19 பாதிப்பு

1 mins read
f053451e-64d1-416a-8316-110683b50936
-

ஜகார்த்தா: இந்தோனீசியா அதன் ஆக மோசமான கொவிட்-19 அன்றாடப் பதிவை இன்று பதிவு செய்தது. இன்று மேலும் 21,342 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாக இந்தோனீசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

இதன்மூலம் நேற்று முன்தினம் நிலவரப்படி இந்தோனீசியாவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,115,304ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக இந்தோனீசியாவில் நேற்று 409 மாண்டனர். கிருமித்தொற்று காரணமாக இந்தோனீசியாவில் இதுவரை 57,138 பேர் மாண்டுவிட்டனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனீசியாவில்தான் ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ஆக அதிகமான மரணங்கள் ஏற்பட்டுள்ளன.