இடிந்து விழுந்த கட்டடத்திலிருந்து ஐந்தாவது சடலம் மீட்பு

இடிந்து விழுந்த கட்டடத்திலிருந்து ஐந்தாவது சடலம் மீட்பு

1 mins read
7271f718-66b2-4a28-aae1-22edcf75b8a1
-
Google News Preferred Icon

மயாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் தலைநகரான மயாமியில் சில நாட்களுக்கு முன்பு இடிந்த விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்தது ஐந்து பேர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

150க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தற்காலிக நினைவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.