பாதிப்பு, மர­ணங்­கள் அதி­க­ரிப்பு

பாதிப்பு, மர­ணங்­கள் அதி­க­ரிப்பு

2 mins read
59875e7a-cfa7-4081-bbbd-650f47de7b91
மேற்கு ஜாவா­வில் உள்ள மருத்­து­வ­மனை ஒன்­றுக்கு வெளியே சிகிச்சை பெற காத்­தி­ருக்­கும் நோயா­ளி­கள். மருத்­து­வ­ம­னைக்­குள் செல்ல அனு­மதி வழங்­கு­வ­தற்கு முன் இவர்­க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது. இந்­தோ­னீ­சி­யா­வில் கொரோனா கிருமி மிக வேக­மாகப் பரவி வரு­கிறது. படம்: ஏஎ­ஃப்பி -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சியா அதன் ஆக மோச­மான

கொவிட்-19 அன்­றா­ட நிலையை நேற்று பதிவு செய்­தது. நேற்று மேலும் 21,342 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக இந்­தோ­னீ­சிய சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இதன்­மூ­லம் நேற்று முன்­தி­ன நில­வ­ரப்­படி இந்­தோ­னீ­சி­யா­வில் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 2,115,304ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று 409 மாண்­ட­னர். கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்­தோ­னீ­சி­யா­வில் இது­வரை 57,138 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களில் இந்­தோ­னீ­சி­யா­வில்­தான் ஆக அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அது­

மட்­டு­மல்­லாது, ஆக அதி­க­மான மர­ணங்­களும் ஏற்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, வரும் ஆகஸ்ட் மாதம் தின­மும் இரண்டு மில்­லி­யன் பேருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போட இந்­தோ­னீ­சியா இலக்கு கொண்­டி­ருப்­ப­தாக அந்­நாட்டு அதி­பர் ஜோக்கோ விடோடோ தெரி­வித்­துள்­ளார்.

இம்­மா­தம் தின­மும் 700,000 பேருக்­குத் தடுப்­பூசி போட இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் திட்­ட­மிட்­டி­ருந்­தது.

அடுத்த மாதம் தின­மும் ஒரு மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போட தேவை­யான ஏற்­பா­டு­களை அது எடுத்து வந்துள்ளது.

இந்­நி­லை­யில், ஆகஸ்ட் மாதத்­தில் தின­மும் இரண்டு மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போட இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் எடுத்­தி­ருக்­கும் முடிவு அங்கு நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தைக் காட்­டு­வ­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

கடந்த மாதம் நோன்­புப் பெரு­நாள் விடு­மு­றைக்­குப் பிறகு இந்­தோ­னீ­சி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு மோச­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வர நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­படும் என்­றும் அதிபர் விடோடோ கூறி­னார்.

டெல்டா, ஆல்ஃபா, பேட்டா போன்ற உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை­க­ளால் கூடு­தல் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­பர் விடோடோ தெரி­வித்­தார்.

நேற்று முன்­தி­ன நில­வ­ரப்­படி இந்­தோ­னீ­சியா இது­வரை 25.48 மில்­லி­யன் கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுள்­ளது. அவற்­றில் 12.91 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் இரண்­டா­வது முறை தடுப்­பூ­சி­க­ளா­கும்.