கூடு­தல் நேரம் வரை போராட்­டம்; வாகை சூடி­யது இத்­தாலி

கூடு­தல் நேரம் வரை போராட்­டம்; வாகை சூடி­யது இத்­தாலி

1 mins read
56ce71e1-8f63-4fd9-a5ab-f86afbf4af54
கூடு­தல் நேரத்­தில் இத்­தா­லி­யின் இரண்­டா­வது கோலைப் போட்ட மத்­தி­ய­தி­டல் ஆட்­டக்­கா­ரர் மெட்­டேயோ பெசினா (இடது). படம்: ஏஎ­ஃப்பி -

லண்­டன்: ஐரோப்­பிய கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் காலி­று­திச் சுற்­றுக்கு இத்­தாலி தகுதி பெற்­றுள்­ளது.

ஆனால் காலி­று­தி­யில் இடம் கிடைக்க ஆஸ்­தி­ரி­யா­வுக்கு எதி­ராக நடை­பெற்ற ஆட்­டத்­தில் அது கடு­மை­யா­கப் போராட வேண்டி இருந்­தது.

முதல் சுற்று ஆட்­டத்­தில் இத்­தாலி அதன் மூன்று ஆட்­டங்­க­ளி­லும் வெற்­றிக் கனி­யைப் பறித்­தது.

இம்­மு­றை­யும் அது எளி­தி­ல் வென்­று­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் ஆஸ்­தி­ரியா விடு­வ­தாக இல்லை.

குறிப்­பாக, ஆட்­டத்­தின் பிற்­பா­தி­யில் ஆஸ்­தி­ரியா ஆதிக்­கம் செலுத்தி தொடர்ந்து பல தாக்­கு­தல்­களை நடத்தி இத்­தா­லி­யைத் திண­ற­டித்­தது.

ஆஸ்­தி­ரி­யா­வின் மார்க்கோ அர்­னாவ்­டோ­விச் தலை­யால் முட்­டிய பந்து இத்­தாலி கோல்­காப்­பா­ள­ரைக் கடந்து சென்று வலை­யைத் தொட்­டது.

இத்­து­டன் இத்­தா­லி­யின் பய­ணம் முடிந்­து­வி­டும் என்று பலர் கரு­தி­ய­போது ஆஃப்சைட் கார­ண­மாக அந்த கோல் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

ஆட்­டம் கோல் ஏது­மின்றி சம­நி­லை­யில் முடிந்­தது. கூடு­தல் நேரத்­தில் இத்­தாலி இரண்டு கோல்­க­ளைப் போட்டு முன்­னிலை வகித்­தது.

ஆட்­டம் முடி­வ­தற்கு முன்பு ஆஸ்­தி­ரியா ஒரு கோல் போட்­டது.

இறு­தி­யில் இத்­தாலி 2-1 எனும் கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

இதன்­மூ­லம் இத்­தாலி தொடர்ச்­சி­யாக 31 ஆட்­டங்­களில் தோல்வி அடை­யா­மல் உள்­ளது.