வேல்ஸ் அணியை வேரோடு சாய்த்­தது டென்­மார்க்

வேல்ஸ் அணியை வேரோடு சாய்த்­தது டென்­மார்க்

1 mins read
ae4af219-0793-4266-8a51-e1dc3ce9aa62
டென்­மார்க்­கின் மூன்­றா­வது கோல். படம்: இபிஏ -

ஆம்ஸ்­டர்­டாம்: ஐரோப்­பிய கிண்­ணத்தை டென்­மார்க் ஏந்தி 29 ஆண்­டு­கள் ஆகின்­றன. மீண்­டும் கிண்­ணத்தை வெல்ல முனைப்­பு­டன் இருக்­கும் டென்­மார்க் குழு நேற்று அதி­காலை நடை­பெற்ற ஆட்­டத்­தில் வேல்ஸ் குழுவை 4-0 எனும் கோல் கணக்­கில் பந்­தாடி காலி­று­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது.

தொடக்­கத்­தில் வேல்ஸ் சிறப்­பாக விளை­யா­டி­ய­போ­தும் நேரம் செல்லச் செல்ல, டென்­மார்க் ஆட்­டத்­தைத் தனது வச­மாக்­கிக்­கொண்­டது.

டென்­மார்க்­கின் அதி­ர­டித் தாக்­கு­த­லைச் சமா­ளிக்க முடி­யா­மல் வேல்ஸ் அணி­யின் தற்­காப்பு சுருண்­டது.

1992ஆம் ஆண்­டில் டென்­மார்க் கிண்­ணம் ஏந்­தி­யதை அடுத்து, இவ்­வாண்­டின் போட்­டி­யில்­தான் அது காலி­று­திச்

சுற்­றுக்­குத் தகுதி பெற்­றி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

2016ஆம் ஆண்டு ஐரோப்­பி­யக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யில் அரை­யி­றுதி வரை சென்ற வேல்­ஸின் பய­ணம் முடிந்­து­விட்­டது.