செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

2 mins read
9c59aaec-33e5-4f83-a4a8-b4f88a40b8ca
-

பதவி வில­கினார் பிரிட்­டிஷ் சுகா­தார அமைச்­சர் மேட் ஹேன்­கோக்

லண்­டன்: பிரிட்­ட­னின் சுகா­தார அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து மேட் ஹேன்­கோக் பதவி வில­கி­யுள்­ளார். சக ஊழி­ய­ருக்கு முத்­தம் கொடுத்து நடப்­பில் உள்ள சமூக இடை­வெளி விதி­மு­றையை மீறி­ய­தற்­காக அவர் பதவி வில­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பொறுப்­பற்ற முறை­யில் நடந்­து­கொண்டு பிரிட்­டிஷ் மக்­க­ளுக்கு ஏமாற்­றத்தை அளித்­தி­ருப்­ப­தாக பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­ச­னுக்கு எழு­திய கடி­தத்தை ஹேன்­கோக் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், ஹேன்­கோக்­கிற்­குப் பதி­லாக சுகா­தார அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்க தாம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பது தமக்­குக் கிடைத்­துள்ள மிகப் பெரிய கௌர­வம் என்­று

திரு சஜிட் ஜாவித் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, ஹேன்­கோக்­கும் அவ­ரு­டன் பணி­பு­ரி­யும் பெண்­ணும் முத்­த­மி­டும் காட்­சி­க­ளைக் காட்­டும் காணொளி தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

இடிந்து விழுந்த கட்­ட­டத்­தி­லி­ருந்து

ஐந்­தா­வது சட­லம் மீட்பு

மயாமி: அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா மாநி­லத்­ தலை­ந­க­ரான மயா­மி­யில் சில நாட்­க­ளுக்கு முன்பு இடிந்து விழுந்த கட்­ட­டத்­தின் இடி­பா­டு­க­ளி­லி­ருந்து மேலும் ஒரு சட­லம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

இது­வரை குறைந்­தது ஐந்து பேர் மாண்­டு­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

150க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­க­ளைக் காண­வில்லை என்­றும் அவர்­க­ளைத் தேடும் பணி தொடர்­கிறது என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இதற்­கி­டையே, இந்­தத் துய­ரச் சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த தற்­கா­லிக நினை­வ­கம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வான்­குடை

வீரர்­கள் இரு­வர் மர­ணம்

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வான்­குடை வீரர்­கள் உயி­ரி­ழந்­த­னர். மாண்­ட­வர்­களில் ஒரு­வர் வான்­குடை சாக­சப் பயிற்­று­விப்­பா­ளர்.

அவர்­கள் சென்­று­கொண்­டி­ருந்த விமா­னத்­தில் கோளாறு ஏற்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்து குதித்த இரு­வ­ரும் விமான நிலை­யத்­தின்

ஓடு­பாதைக்கு அரு­கில் விழுந்து மாண்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வத்துக்கான காரணத்தைக் கண்டறிய

ஆஸ்­தி­ரே­லி­யப் போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்­புப் பிரி­வும் போலி­சும் விசா­ரணை நடத்­து­கின்­றன.