ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்றில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் நீதிபதியாக பொறுப்பெற்றுக்கொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப் சிங் திவானா, ஆஸ்திரேலிய மண்ணில் இந்த வரலாற்றை எழுதியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநில கவுண்டி கோர்ட் நீதிமன்றத்துக்கு அம்மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் பிரதீப் சிங்கிற்கு 51 வயதாகிறது. விக்டோரிய கவுண்டி கோர்ட் எனப்படுவது ஏனைய மாநிலங்களில் மாவட்ட நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படும் நீதிமன்றத்துக்கு சமமானது.
லண்டனில் பிறந்து அங்கு சட்டக்கல்வியை முடித்துவிட்டு- வழக்கறிஞராக பணியாற்றிய பிரதீப் சிங், 2006ல் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
இவர் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ள செய்தியை பஞ்சாப்பில் இவரது சொந்த ஊர் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

