செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
93aaabda-bae8-4f53-b21e-3037bfd64eb4
-

தைவானில் ஒரு நாள்

தொற்று குறைகிறது

தைப்பே: தைவானில் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இருந்தாலும் எளிதில் பரவும் தன்மைகொண்ட உருமாறிய டெல்டா கிருமி குறித்து அரசாங்கம் கவலையில் உள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் சென் ஷி-சுங், உள்ளூர் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் 60ஆக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு முந்தைய நாளன்று தொற்று எண்ணிக்கை 88ஆக இருந்தது.

உயர் விழிப்பில் தோக்கியோ

தோக்கியோ: தலைநகர் தோக்கியோவில் தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் யோஷிஹிடே வலியுறுத்தியுள்ளார். தோக்கியோவில் இன்னும் மூன்று வாரங்களில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவிருக்கிறது. "நாடு முழுவதும் கிருமிப் பரவல் இறங்குமுகமாக இருந்தாலும் தலைநகரில் மட்டும் சற்று அதிகரித்துள்ளது," என்று பிரதமர் சுகா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் தொற்று அச்சம்

சிட்னி: அதிவேகத்தில் பரவும் டெல்டா கிருமியால் சிட்னி நகரம் முடக்கப்பட்டுள்ளதால் அது குறித்து நாடு முழுவதும் அச்சம் அதிகரித்துள்ளது. இருபது மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள், அதாவது மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் ஏதாவதொரு கொவிட்-19 கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கொவிட்-19 நடவடிக்கை குழு, அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

இந்தோனீசியாவில் கிருமி பரவுகிறது

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தொடர்ந்து 5வது நாளாக கிருமித்தொற்று அதிகரித்துள்ளது. ஞாயிறு அன்று 21,342 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.