'கொவிட்-19 பரவல் பேரழிவை நோக்கிச் செல்கிறது'

'கொவிட்-19 பரவல் பேரழிவை நோக்கிச் செல்கிறது'

1 mins read
47a637ce-0344-4baf-a6b2-b7385f4a94a6
இந்தோனீசியாவின் ஜாவா மாநிலம், சோலோ நகரில் உள்ள வீதியில் கிருமிநாசினி தெளிக்கும் சுகாதாரத் துறை ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி -

இந்தோனீசியாவில் கொவிட்-19 கிருமிப் பரவல் பேரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்கிறது செஞ்சிலுவை சங்கம்.

டெல்டா வகை கிருமி அதிகம் பரவுவதும் நோன்புப் பெருநாள் பயணங்களும் அங்குக் கிருமிப் பரவல் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று அந்த சங்கம் கூறியுள்ளது.

கிருமிப் பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கெனவே தாங்கள் சிகிச்சையளிக்கும் திறனுக்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்டுள்ளன.

இதற்கிடையே, கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி வீட்டிலிருந்தே வேலை செய்வது, உணவகங்களில் சாப்பிட தடை போன்றவை நடைமுறைப்படுத்தப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்