ஹெண்டர்சன் ரோடு புளோக் குடியிருப்பாளர்களுக்குக் கட்டாய பரிசோதனை

ஹெண்டர்சன் ரோடு புளோக் குடியிருப்பாளர்களுக்குக் கட்டாய பரிசோதனை

1 mins read
286cd58b-a856-4293-a0c0-76db1cddce73
96B ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள கூடாரத்தில் பரிசோதனை நடத்தப்படும். படம்: கூகல் வரைபடம் -

புளோக் 91 ஹெண்டர்சன் ரோட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஐந்து பேருக்குக் கிருமித்தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

96B ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள கூடாரத்தில் நாளையும் (ஜூன் 30) நாளை மறுதினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பரிசோதனை நடத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.