பிரிஸ்பனிலும் முடக்கநிலை

பிரிஸ்பனிலும் முடக்கநிலை

2 mins read
8305a7e2-2e1c-432b-83d3-a7a6ac1f9931
-

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் கிருமிப் பரவல்

சிட்னி: கிருமிப் பரவலைச் சிறப்பாக கையாண்ட நாடாக அறியப்பட்ட ஆஸ்திரேலியாவில் தற்போது சுமார் 12 மில்லியன் பேர் முடக்கநிலை உத்தரவால் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கின்றனர்.

டெல்டா வகை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாடு போராடி வரும் நிலையில், பிரிஸ்

பனில் இரண்டு உள்ளூர் தொற்று சம்பவங்கள் பதிவானதால் அங்கு நேற்று முதல் முடக்கநிலை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர அனுமதி கிடையாது. இந்த முடக்கம் மூன்று நாட்களுக்கு நடப்பில் இருக்கும்.

முன்னதாக சிட்னியில் இருந்து திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் பெர்த்திலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

சென்ற வார இறுதியில் சிட்னி மற்றும் டார்வினில் இரண்டு வார முடக்கநிலை உத்தரவு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

நியூ சவுத் வேல்ஸின் தலைநகரான சிட்னியில் 150 தொற்றுச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

கிருமிப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக, சில நகரங்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

பெரும்பாலான இடங்களில் கட்டாய முகக்கவசம், குறைவான எண்ணிக்கையில் கூடுவது போன்ற கட்டுப்பாடுகளும் நடப்பில் உள்ளன.

வெளிநாட்டு பயணிகளைத் தனிமைப்படுத்தும் ஹோட்டல்களில் இருந்து டெல்டா வகை கிருமித்தொற்று பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போதைய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் விமான ஊழியர்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, அதிகரித்து வரும் கிருமிப் பரவல், தடுப்பூசி இயக்கத்தைத் விரைவுப்படுத்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு நெருக்கடி தருவதாகவும் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.