செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d913587c-5aa8-49a0-837b-4e1893978251
-

நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மாமன்னர் மீண்டும் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா: நாடாளுமன்றத்தைச் சீக்கிரம் கூட்ட வேண்டும் என்று மலேசிய மாமன்னர் நேற்று மீண்டும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அவைத் தலைவர் அசிசான் ஹாருணும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ரயஸ் யாத்திமும் நேற்று மாமன்னரைச் சந்தித்த பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் மன்னர் இவ்வாறு சொன்னார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அர்ப்பணிப்பிற்கும், நாடாளுமன்றத்தைச் சீக்கரம் கூட்டுவதற்கு அவர்கள் தயாராக இருப்பதற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கட்டட விபத்து; பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு

சர்ப்சைட்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மயாமி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்த போது, கடந்த வியாழக்கிழமை நேர்ந்த இந்த விபத்தில் சிக்கிய மேலும் 150 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

கனடாவில் ஆக அதிக வெப்பநிலை

ஒட்டாவா: கனடாவிலும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லிட்டன் பகுதியில் ஆக அதிகமாக ஞாயிற்றுக்கிழமையன்று 46.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

தற்போது கனடாவைவிட துபாய் குளிர்ச்சியாக இருக்கும் என்கிறார் கனடாவின் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஒருவர். வாஷிங்டனின் சியேட்டல் 40 டிகிரி செல்சியசும் போர்ட்லாண்ட்டில் 45.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவானது.

பிலிப்பீன்சில் கட்டுப்பாடு நீட்டிப்பு

மணிலா: பிலிப்பீன்சின் சில பகுதிகளில் கிருமிப் பரவல் குறைந்திருந்தாலும் சில மாநிலங்களில் கிருமித்தொற்று அதிகமாக உள்ளதால் பிலிப்பீன்ஸ் தலைநகர் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை ஜூலை மாத நடுப்பகுதி வரை அந்நாட்டு அரசாங்கம் நீட்டித்து

உள்ளது. மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்.