பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டதற்காக வருந்துகிறேன்: பிரான்ஸ் வீரர் எம்பாப்வே

பாரிஸ்: காற்பந்து விளையாட்டின் உலகக் கிண்ண வெற்றியாளரான பிரான்ஸ் அணி, யூரோ காற்

பந்தாட்ட தொடரில் இருந்து வெளியேறியது.

யூரோ கிண்ணத்தை வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய சுற்றில் சுவிட்சர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது பிரான்ஸ்.

75வது நிமிடத்தில் பால் போக்பா ஒரு கோல் போட்டு 3-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்தபோது அது காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகத்தான் இருந்தது.

ஆனால், ஆட்டம் முடிய பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது சுவிட்சர்லாந்து ஒரு கோல் போட்டவுடனேயே ரசிகர்களிடையே பர

பரப்பு தொற்றிக்கொண்டது.

தொடர்ந்து சளைக்காமல் விளையாடிய சுவிட்சர்லாந்து 90வது நிமிடத்தில் மேலும் கோல் போட்டு ஆட்டத்தை 3-3 என்று சமன் செய்து பிரான்சிற்கு அதிர்ச்சி அளித்தது.

அதன் பிறகு கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடாததால், வெற்றி தோல்வியை முடிவு செய்ய பெனால்டி முறை நடத்தப்பட்

டது.

அப்போது பிரான்சின் கிலியான் எம்பாப்வே கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை, சுவிட்சர்லாந்தின் கோல் காப்பாளர் யான் சோமர் கோலாகாமல் தடுத்துவிட்டார்.

இதையடுத்து பெனால்டி வாய்ப்பில் 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்து கால்இறுதிக்கு முன்னேறியது.

தொடரில் இருந்து வெளியேறியது குறித்து பிரான்ஸ் அணி மிகவும் வருத்தமாக உள்ளது என்ற எம்பாப்வே, "பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டதற்காக வருந்துகிறேன். இதனால் என்னால் தூங்க முடியாது.

"ஆனால் துரதிர்ஷ்டவசமாக விளையாட்டின் இந்த ஏற்ற, தாழ்வுகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்," என்றார்.

ஸ்பெயினுக்கு ஈடுகொடுத்த குரோவேஷியா

இதற்கு முன்பு நடைபெற்ற குரோவேஷியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஆட்டத்திலும் எதிர்பாரா திருப்பங்களுக்கும் பரபரப்பிற்கும் குறைவில்லை.

ஆட்டம் முழுவதும் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தினாலும் குரோவேஷியா அணியும் அதற்கு ஈடுகொடுத்து வியைாடியது.

ஸ்பெயினின் சொந்த கோலால் 20வது நிமிடத்தில் கிடைத்த ஒரு கோலைத் தவிர கடைசி நேரம் வரை குரோவேஷியா கோல் எதுவும் போடவில்லை.

இதற்கிடையே, ஸ்பெயின் மூன்று கோல்கள் போட்டது. எனவே 85வது நிமிடம் வரை ஆட்டம் 3-1 என ஸ்பெயினுக்குச் சாதகமாகவே இருந்தது.

ஆனால் அதன் பிறகு மீண்டெழுந்த குரோவேஷியா தொடர்ந்து இரண்டு கோல்கள் போட்டு ஆட்டத்தை 3-3 என சமன் செய்ததை

அடுத்து, கூடுதல் நேரம் அளிக்கப் பட்டு ஆட்டம் தொடர்ந்து.

அப்போது அல்வரோ மொராட்டோ 100வது நிமிடத்திலும் மிக்கியில் ஓயர்சபால் 103வது நிமிடத்திலும் கோல்கள் போட்டனர்.

இதையடுத்து வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!