இங்­கி­லாந்தைக் காப்­பாற்­றிய ஜேக் கிரி­லிஷ்

இங்­கி­லாந்தைக் காப்­பாற்­றிய ஜேக் கிரி­லிஷ்

2 mins read
406b8041-79d9-4719-8aaf-d68b269c143a
இங்கிலாந்தின் தாக்குதல் வீரர் ஹேரி கேன் 2வது கோலைப் போட்டு ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை உறுதி செய்தார். படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் ஜேக் கிரிலிஷ் களமிறக்கப்பட்டதும் ஆட்டத்தின் போக்கே மாறியது.

நேற்று முன்தினம் நடந்த அந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் போடாததால் விறு­வி­றுப்­பின்றி காணப்பட்டது.

தற்­காப்பு ஆட்­டத்­திற்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்த இங்­கி­லாந்து பயிற்­று­விப்­பா­ளர் கேரத் சௌத்­கேட், ஐந்து தற்­காப்பு வீரர்­களைக் கள ­மி­றக்­கி­னார்.

ஆட்­டத்­தின் 69ஆம் நிமி­டத்­தில் மாற்று ஆட்­டக்­கா­ர­ரான ஜேக் கிரி­லிஷை இறக்­கிய பின்னரே இங்­கி­லாந்து அணி சுறு­சு­றுப்­பு­டன் விளை­யா­டத் தொடங்­கி­யது, ஆட்­டத்­தின் போக்கே மாறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

ஜேக் கிரி­லிஷ் வந்த வேகத்­தில், ஆட்­டத்­தின் 75வது நிமி­டத்­தில் அவர் கொடுத்த பந்து தற்­காப்பு வீர­ரும் மான்­செஸ்­டர் யுனை­டெட் தற்­காப்பு ஆட்­டக்­கா­ர­ரு­மான லுக் ஷா என்­ப­வ­ரின் பாதை­யில் விழ அவர் அதை லாவ­க­மாக ரஹிம் ஸ்டெர்­லிங் பாதை­யில் செலுத்­தி­னார். அதை மகிழ்ச்­சி­யு­டன் ஏற்றுக்­ கொண்ட ரஹிம் ஸ்டெர்­லிங் பந்தை ஜெர்ம­னி­யின் கோல் வலைக்­குள் புகுத்தினார். இத்துடன் இந்த யூரோ கிண்ணப் போட்டியில் ரஹிம் ஸ்டெர்லிங் மூன்று கோல்களைப் போட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜெர்­ம­னிக்கு எதி­ரான அடுத்த கோலும் ஜேக் கிரி­லிஷ் மூலமே வந்­தது. இந்த முறை அவர் பந்தை நேராக இங்கிலாந்து தாக்குதல் ஆட்டக்காரர் ஹேரி கேன் பாதை­யில் செலுத்த அவ­ரும் அதை தலை­யால் முட்டி வலைக்குள் செலுத்த, இங்­கி­லாந்து 2-0 என்ற கோல் எண்­ணிக்­கை­யில் வெற்றி பெற்றது.

இந்­தப் போட்­டி­யில் ஹேரி கேன் இங்­கி­லாந்­துக்­காக போட்ட முதல் கோல் இது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ரஹிம் ஸ்டெர்­லிங் முதல் கோல் போட்ட பிறகு இங்­கி­லாந்து 1-0 என முன்­னிலை பெற்­ற நிைலயில் இதே ரஹிம் ஸ்டெர்­லிங் தமது வசம் இருந்த பந்தை ஜெர்­ம­னி­யின் காய் ஹவெர்ட்ஸ் என்­ப­வ­ருக்கு விட்­டுக் கொடுக்க அவ­ரும் அதை தாமஸ் முல்­லர் என்ற ெஜர்­ம­னி­யின் தாக்­கு­தல் வீர­ரின் பாதை­யில் செலுத்த முல்­லர் இங்­கி­லாந்­துக்கு எதி­ராக கோல் போட்டு ஆட்­டத்தை சமன் செய்து விடுவாரோ என அனை­வ­ரும் பர­ப­ரப்­பு­டன் எதிர் பார்த்தனர். ஆனால், முல்­லர் பந்தை கோல் வலைக்கு அப்­பால் அடித்து கிடைத்த பொன்­னான வாய்ப்பை வீண­டித்­தார்.

இந்த வெற்­றி­யின் மூலம் 1966ஆம் உல­கக் கிண்­ணக் காற்­பந்­து இறுதிப் போட்­டி­யில் ஜெர்­ம­னியை வென்று கிண்ணத்தை வென்ற இங்­கி­லாந்து அதன் பின் அனைத்­து­லகப் போட்டி ஒன்­றில், அடுத்த சுற்­றுக்குச் செல்­லும் தகுதி பெற, ஜெர்­ம­னியை மீண்­டும் இப் பொழுதுதான் வீழ்த்தியுள்ளது.

வரும் சனிக்­கி­ழ­மை­யன்று நடக்கும் காலிறு­திப் போட்­டி­யில் இங்­கி­லாந்து அணி, சு­வீ­டனை 2-1 என வெற்றிகொண்டு காலி­றுதிச் சுற்றுக்கு முன்­னே­றி­யுள்ள உக்­ரேனைச் சந்திக்கிறது.