கோலாலம்பூர்: அவசரநிலை காலாவதியாகும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் நாடாளு மன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று மாமன்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் முகைதீன் தலைமையிலான அரசாங்கம், அக்டோபரில் நாடாளு மன்றத்தைக் கூட்ட கடப்பாடு தெரிவித்துள்ளது.
ஆனால் இதனை மாமன்னர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நேற்று இரு அவைத் தலைவர்களையும் மாமன்னர் சந்தித்துப்பேசினார்
அதன் பின்னர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் மாமன்னரைச் சந்தித்தபோது அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் நாடாளு மன்றத்தைக் கூட்ட தயாராக, முழுக்கடப்பாட்டுடன் இருக்கிறோம் என்று தெரி வித்ததாக கீழவை சபா நாயகர் அஸார் ஹாருனும் செனட் தலைவர் ரையிஸ் யடிமும் குறிப்பிட்டு உள்ளனர்.
இது குறித்து பிரதமரிடமும் தெரிவித்துள்ளதாகக் கூறிய அவர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் சிறப்புக் கூட்டத்தை நடத்த பரிந்துரை செய்துள்ளனர்.

