செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
a2a7f883-c648-4931-88a0-7ec161aed62e
-
Google News Preferred Icon

சீன மாணவர்களால்

சுதந்திரமாக பேச முடியவில்லை

கேன்பரா: ஆஸ்திரேலியாவில் உள்ள ஜனநாயக ஆதரவு சீன மாணவர்களால் வெளிப்படையாகப் பேச முடிய வில்லை. அப்படி பேசினால் சக மாணவர்களால் அவர்களுக்கு நெருக்கடி ஏற்படுவதாக ஆஸ்திரே லியாவில் உள்ள மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்தது. வகுப்பறைகளிலும் சீன மாணவர்கள் வாய்ப்பூட்டு போட்டுக்கொள்கின்றனர். இதனால் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பேச்சுரிமை பாதிக்கப்படுகிறது.

சீன தூதரகத்தில் தங்களைப் பற்றி சக மாணவர்கள் தெரிவித்துவிடுவார்கள் என்று சீன மாணவர்கள் அஞ்சுகின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது 160,000 சீன மாணவர்கள் படிக்கின்றனர்.

கைதிகளை விடுவிக்க திட்டம்

யங்கூன்: யங்கூனில் உள்ள இன்சியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 700க்கும் மேற்பட்ட கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று அதன் தலைவர் ஸாவ் ஸாவ் ராய்ட்டர்சிடம் தெரிவித்துள்ளார். ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக போராடியதால் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

டெல்டாவுக்கு எதிராக

மொடர்னா செயல்திறன்மிக்கது

கேம்பிரிட்ஜ்: டெல்டா உட்பட உருமாறிய கிருமிகளுக்கு எதிராக மொடர்னா தடுப்பூசி ஆற்றலுடன் செயல்படக் கூடியது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மருந்தை தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது. பீட்டா, காப்பா மற்றும் டெல்டா உருமாறிய கிருமிகளுக்கு எதிராக மொடர்னா எதிர்ப்பு சக்திகளை உருவாக்கியதாக மொடர்னா தலைமை நிர்வாகி ஸ்டீபன் பன்செல் கூறியுள்ளார்.