கனடாவை வாட்டும் வெப்பத்துக்கு 12 பேர் பலி

கனடாவை வாட்டும் வெப்பத்துக்கு 12 பேர் பலி

2 mins read
18afd0dd-4f7a-4e4b-86f5-72c6f10513db
-

ஒட்­டாவா: கன­டா­வில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு வெப்­பம் மக்­களை வாட்டி வரு­கிறது. இது­வரை 12 பேர் அதற்குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

சென்ற வெள்­ளிக்கிழ­மை­யில் இ­ருந்து 130க்கும் மேற்­பட்ட திடீர் மர­ணச்­சம்­ப­வங்­களை வேன்­கூ­வர் போலிசார் கையாண்டு வந்­துள்­ள­னர்.

அவர்­களில் ெபரும்­பா­லோர் வய­தா­ன­வர்­கள் அல்­லது நோய் நொடி­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள்.

பெரும்­பா­லான மரணங்களில் தகிக்­க­வைக்­கும் வெப்­பமே முக்­கிய கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

3வது நாளாக செவ்­வாய்க்­ கிழமை அன்­றும் பிரிட்­டிஷ் கொலம்­பி­யா­வின் லிட்­ட­னில் ஆக உச்­ச­மாக 49.5 சென்­டி­கி­ரேட் வெப்­பம் பதி­வா­கி­யுள்­ளது.

இவ்­வா­ரத்­துக்கு முன்பு வரை வெப்­ப­நிலை 45 சென்­டி­கி­ரேடை தாண்­டி­ய­தில்லை. ஆனால் வட மேற்கு அமெ­ரிக்கா, கன­டா­வில் தொடர்ந்து அனல்­காற்று வீசுவதால் வெப்­ப­நிலை புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது.

இந்த நிலையில் பரு­வ­நிலை மாற்­றத்­தால் வானி­லை­யில் மேலும் புதிய உச்­சத்தை சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

வேன்­கூ­வ­ரில் மட்டும் குறைந்தது 65 பேர் வெப்பத்துக்குப் பலியாகிவிட்டனர் என்று அந்நகரப் போலி­சார் தெரி­வித்­தனர்.

பர்­னபி போன்ற புற­ந­கர்ப் பகுதி­ களில் 34ம், சர்­ரே­யில் 38ம் திடீர் மர­ணச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

"இப்­ப­டி­யொரு வெப்­பத்தை வேன்­கூ­வர் சந்­தித்­த­தில்லை. டஜன் கணக்­கா­னோர் இதற்கு உயி­ரி­ழந்­தி­ருப்­பது மிக­வும் வருத்­த­ம­ளிக்­கிறது," என்று காவ­லர் ஸ்டீவ் அடி­சன் கூறி­னார்.

"போது­மான அதி­கா­ரி­கள் இல்லையென்றாலும் மக்­க­ளின் பாது­காப்­புக்கு எங்­க­ளால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வரு­கி­றோம். திடீர் மர­ணச் சம்­ப­வங்­கள் மும்­ம­டங்காகப் பெரு­கி விட்­டது," என்றார் அவர்.

வேன்கூவரின் கிழக்கே உள்ள சிறிய கிராமமான லிட்டனில் வசிக் கும் மேகான் ஃபான்ட்ரிச், வெளியே தலைகாட்ட முடியவில்லை என்றார்.

"வீட்டிலேயே முடங்கிக் கிடக் கிறோம். இதற்கு முன்பும் வெப் பத்தை அனுபவித்துள்ளோம். ஆனால் 30க்கும் தற்போதுள்ள 47 சென்டிகிரேடுக்கும் பெரிய வித்தி யாசம் உள்ளது," என்று அவர் தெரி வித்தார்.

கடும் வெப்பம் காரணமாக வேன்கூவரில் பள்ளிகளும் தடுப்பூசி நிலையங்களும் மூடப்பட்டன. வெப்பத்தைத் தணிக்க அதிகாரிகள் ஆங்காங்கே தற்காலிக நீருற்றுகளை அமைத்துள்ளனர்.

சாலை முனைகளில் தண்ணீர் தெளிப்பானும் அமைக்கப்பட்டுள்ளது. குளிர் சாதனங்களும் விசிறிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதால் அவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

வீட்டில் குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் காரில் உள்ள சாதனத்தைப் பயன்படுத்தி வெப் பத்தைப் போக்கி வருகின்றனர்.

அமெரிக்காவும் அனலில் கொதித்து வருகிறது. மேற்கு அமெரிக்காவில் உள்ள நகரங்களில் அவசரகால குளிரூட்டும் நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்குத் தண்ணீர் போத்தல்கள், தொப்பிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.