டோனல்ட் ரம்ஸ்ஃபெல்ட் காலமானார்

1 mins read
5bfbaa2e-600c-4862-b428-a480eeb6b10d
-

அமெரிக்காவின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் டோனல்ட் ரம்ஸ்ஃபெல்ட் காலமானார் . ஈராக் போரை நடத்திய முக்கியமானவர்களில் ஒருவரான அவர், தமது 88 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினளர் தெரிவித்தனர்.

திரு ரம்ஸ்ஃபெல்ட் நாட்டிற்கு சேவையாற்றியது மட்டுமல்லாது நல்ல தந்தையாகவும் தாத்தாவாகவும் இருந்ததாக நியூ மெக்சிகோ மாநிலத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வியட்னாம் போர்க்கால தற்காப்பு அமைச்சர் ராபர்ட் மக்னமாராவுக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றிருந்த திரு ரம்ஸ்ஃபெல்ட், அப்போதைய ஈராக்கிய அதிபர் சடாம் ஹுசேனை விரைவில் கவிழ்த்தார். ஆனால் அதன் பின்னர் ஈராக்கில் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் காப்பாற்றத் தவறியதால் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வன்முறை தொடர்ந்து நிலவியது.