ஹைட்டியில் பயங்கரவாதத் தாக்குதல்

1 mins read
91fdcac7-647c-40cc-8b40-f8f56d4a051a
-

போர்ட்-ஆவ்-பிரின்ஸ் (ஹைட்டி): ஹைட்டியில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று அந்நாட்டின் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்சில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு செய்தியாளர், எதிர்க்கட்சி ஆர்வலர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

ஹைட்டியில் கடந்த ஓராண்டாக வன்முறைச் செயல்கள் வேகமாக அதிகரித்துவந்துள்ளன. குண்டர் கும்பல்களுக்கிடையே நேர்ந்துவரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களின் காரணமாக ஏழைகள் பலர் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைத்தன்மை இல்லாத அரசியல் சூழல், பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் ஹைட்டி சில காலமாகவே அடுத்தடுத்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறது. அதனால் அந்நாட்டில் ஆள்கடத்தல் மற்றும் குண்டர் கும்பல்களுக்கிடையிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.