இந்திய தயாரிப்பு தடுப்பூசியின் தடுப்பாற்றல் விவரம் வெளியீடு

1 mins read
5eedd027-c3d7-46b3-8cc7-55a7704c76bb
-

இந்­தி­யா­வின் உள்­நாட்டு தயா­ரிப்­பான கோவேக்­சின் தடுப்­பூ­சி­யின் மூன்­றாம் கட்­டப் பரி­சோ­தனை முடி­வ­டைந்­துள்­ள­தைத் தொடர்ந்து அதன் நோய் எதிர்ப்பு ஆற்­றல் விவ­ரங்­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

இந்­தத் தடுப்­பூசி ஒட்­டு­மொத்த கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்­புக்கு எதி­ராக 77.8 விழுக்­காட்டு ஆற்­ற­லைக் கொண்­டி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

அதே­நே­ரம் கிரு­மித்­தொற்­றால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு 93.4 விழுக்­காடு பலனை இத்­த­டுப்­பூசி தரு­வ­தா­க­வும் ஓர­ளவு பாதிப்­புள்ள நோயா­ளி­க­ளுக்கு 78 விழுக்­காடு பல­னைத் தரு­வ­தா­க­வும் இத­னைத் தயா­ரித்து வரும் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

டெல்டா என உரு­மாற்­றம் அடைந்­துள்ள கிரு­மி­யின் தொற்­றுக்கு எதி­ராக 65 விழுக்­காட்டு செயல்­தி­றனை கோவேக்­சின் கொண்­டி­ருப்­ப­தாக இந்­நி­று­வ­னத்­தின் அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.

கோவேக்­சின் தடுப்­பூ­சி­யின் இரண்டு கட்­டப் பரி­சோ­த­னை­கள் ஏற்­கெ­னவே முடிந்­து­விட்ட நிலை­யில் மூன்­றா­வது, இறு­திக்­கட்­டப் பரி­சோ­தனை தாம­த­ம­டைந்து வந்­தது. ஒரு­வ­ழி­யாக மூன்­றாம் கட்­டப் பரி­சோ­தனை நடத்தி முடிக்­கப்­பட்டு உள்­ளது. நாடு முழு­வ­தும் 25 நக­ரங்­களில் கொவிட்-19 அறி­குறி காணப்­பட்ட 130 பேருக்கு இந்­தத் தடுப்­பூசி போடப்­பட்டு பரி­சோ­திக்­கப்­பட்­டது.

குறிப்­பாக, இரண்­டா­வது முறை­யாக அவர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட்ட இரு வாரங்­க­ளுக்­குப் பின்­னர் நோய் எதிர்ப்­பாற்­றல் விகி­தம் தெரிய வந்­த­தாக பாரத் பயோ­டெக் கூறி­யுள்­ளது.

19க்கும் 98க்கும் இடைப்பட்ட வயதினர் மூன்று கட்டப் பரிசோத னைகளிலும் கலந்துகொண்டதாக அது தெரிவித்தது. மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்பிருந்தே கோவேக்சின் இந்தி யாவில் போடப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்