விபத்துக்குள்ளான ராணுவ விமானம்; பிலிப்பீன்சில் பலர் பலி

மணிலா: பிலிப்­பீன்­சின் ராணுவ விமா­னம் ஒன்று விபத்­துக்­குள்­ளா­ன­தில் குறைந்­தது 17 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

பெரும்­பா­லான ராணுவ வீரர்­கள் உட்­பட 85 பேரு­டன் சென்ற சி-130 என்ற ராணுவ விமா­னம் பிலிப்­பீன்­சின் சூலு­வில் உள்ள ஜோலோ துறை­மு­கத்­தில் தரை­யி­றங்­கிய போது விபத்­தில் நேர்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

விமா­னம் விழுந்­த­வு­டன் தீப்­பற்றி எரிந்­ததால் 17 பேர் உயி­ரி­ழந்­து

விட்டனர்.

அதன் பிறகு மேற்­கொள்­ளப்­பட்ட மீட்பு நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து 40 பேர் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பிலிப்­பீன்ஸ் ராணுவ தள­பதி சிரி­லிட்டோ சோபெ­ஜானா உறு­திப்­ப­டுத்­தி­னார்.மற்­ற­வர்­களை மீட்­கும் பணி முடுக்கி

­வி­டப்­பட்­டுள்­ளது.

விமா­னம் ஓடு­பா­தை­யைத் தவ­ற­விட்ட கார­ணத்­தால் இந்த விபத்து ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் ராணு­வத் தள­பதி தெரி­வித்­தார்.

இந்த விமா­னத்­தில் ஐந்து ராணுவ வாக­னங்­களும் கொண்டு செல்­லப்­பட்­டன.

தீவி­ர­வாத குழுக்­க­ளின்

அச்­ச­றுத்­த­லைச் சமா­ளிக்­கும் வகை­யில் பிலிப்­பீன்ஸ் தனது ராணு­வத்தை நவீ­னப்­ப­டுத்தி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!