தனிமைப்படுத்திக்கொண்ட தாய்லாந்து பிரதமர்

1 mins read
8c8b281d-bcf3-46b4-a5fd-2840995f451d
-

பேங்காக்: தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத்தளமான புக்கெட்டிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலா பயணிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்துகொண்ட தாய்லாந்து வர்த்தக நிர்வாகி ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்

படுத்தப்பட்டுள்ளார்.

இரண்டு தவணை அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பிரதமர் நலமாக உள்ளதாகவும், வீட்டில் இருந்த

படியே தனது பணியைத் தொடரு

வார் என்று தெரிவிக்கப்பட்டு

உள்ளது.

இதே போல் பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டனும் தனிமைப்

படுத்தப்பட்டுள்ளார். அவருக்குத் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சென்ற வாரம் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.