வெலிங்டன்: ஆடுகளைச் சரிவர கவனிக்காத விவசாயிக்கு நியூசிலாந்தில் 9 மாத வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 2019ல் பல ஆடுகள் இறந்து கிடந்ததைத்தொடர்ந்து, நியூசிலாந்தின் தென் தீவின் ரஸ்ஸாக் க்ரீக்கில் உள்ள பேவன் ஸ்காட் டைட் என்பவரின் பண்ணை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
அதன் பிறகு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஆடுகளை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு விவசாயிக்கு அறிவுறுத்தினர்.
ஆனால் ஆகஸ்ட்டில் விலங்கு
களின் நிலைமை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து 226 ஆடுகள் கருணைக் கொலை செய்யப்பட்டன. மற்றவை வேறு பண்ணைகளுக்கு மாற்றப்பட்டன.
ஆடுகளைச் சரிவர கவனிக்காத குற்றத்தை விவசாயி ஒப்புக்கொண்டார். இருப்பினும் அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவரது தற்காப்பு தரப்பு கூறியது.
இதையடுத்து, விலங்கு நலச் சட்டத்தின் கீழ் அவருக்கு ஒன்பது மாத வீட்டு காவல் தண்டனையும் 150 மணி நேர சமூக சேவை செய்யவும் உத்தரவிடப்பட்டது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பண்ணை விலங்குகளை நிர்வகிக்கவோ அல்லது சொந்தமாக வைத்துக்கொள்ள வும் அவருக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.