தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊட்டச்சத்து இல்லாத ஆடுகள்; விவசாயிக்கு தண்டனை

1 mins read
fc4a2616-6c96-40d5-b396-04703b593986
-

வெலிங்டன்: ஆடு­க­ளைச் சரி­வர கவ­னிக்­காத விவ­சா­யிக்கு நியூ­சி­லாந்­தில் 9 மாத வீட்டுக் காவல் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஏப்­ரல் 2019ல் பல ஆடு­கள் இறந்து கிடந்­த­தைத்­தொ­டர்ந்து, நியூ­சி­லாந்­தின் தென் தீவின் ரஸ்­ஸாக் க்ரீக்­கில் உள்ள பேவன் ஸ்காட் டைட் என்­ப­வ­ரின் பண்ணை அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­திற்கு வந்­தது.

அதன் பிறகு விசா­ரணை மேற்­கொண்ட அதி­கா­ரி­கள், ஆடு­களை நன்­றாக கவ­னித்­துக் கொள்­ளு­மாறு விவ­சா­யிக்கு அறி­வு­றுத்தினர்.

ஆனால் ஆகஸ்ட்­டில் விலங்­கு­

க­ளின் நிலைமை மிக­வும் மோச­ம­டைந்­த­தைத் தொடர்ந்து 226 ஆடு­கள் கரு­ணைக் கொலை செய்­யப்­பட்­டன. மற்­றவை வேறு பண்­ணை­க­ளுக்கு மாற்­றப்­பட்­டன.

ஆடு­க­ளைச் சரி­வர கவ­னிக்­காத குற்­றத்தை விவ­சாயி ஒப்­புக்­கொண்­டார். இருப்­பி­னும் அவர் மன­அ­ழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் போது­மான ஆத­ரவு கிடைக்­க­வில்லை என்­றும் அவ­ரது தற்­காப்பு தரப்பு கூறி­யது.

இதை­ய­டுத்து, விலங்கு நலச் சட்­டத்­தின் கீழ் அவ­ருக்கு ஒன்­பது மாத வீட்டு காவல் தண்­ட­னை­யும் 150 மணி நேர சமூக சேவை செய்­ய­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டது. மேலும் நான்கு ஆண்­டு­க­ளுக்கு பண்ணை விலங்­கு­களை நிர்­வ­கிக்­கவோ அல்­லது சொந்­த­மாக வைத்துக்கொள்ள வும் அவருக்குத் தடை விதிக்­கப் பட்­டுள்­ளது.