மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், அம்னோவின் துணைத் தலைவர் இஸ்மயில் சப்ரி யாகோப்பை அந்நாட்டின் துணைப் பிரதமராக நியமித்துள்ளார். பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் நிர்வாகத்திற்கான தனது ஆதரவை மீட்டுக்கொள்வதா இல்லை என்பது குறித்து அம்னோ இன்றிரவு நடத்தும் கலந்துரையாடலுக்கு முன்னதாகவே திரு யாசின் இந்த முடிவை அறிவித்தார்.
துணைப்பிரதமராகப் போகும் திரு சப்ரி, நாட்டின் நிர்வாகம் மற்றும் கிருமிப்பரவல் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து நிறைவு செய்வது போன்ற காரியங்களுக்காக பிரதமருக்கு உதவி செய்வார் என்று மலேசியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
திரு இஸ்மயில் தொடர்ந்து தற்காப்பு அமைச்சர் பதவியை வகிப்பார்.

