'நிலைமை மேலும் மோசமடையக்கூடும்'

'நிலைமை மேலும் மோசமடையக்கூடும்'

2 mins read
fdbdfbaf-3772-426f-8302-d5d37b1e7e0e
-

ஜகார்த்தா: கிரு­மித்­தொற்று பர­வ­லால் நிலைமை மேலும் மோச­ம­டை­யக்­கூ­டும் என்று எச்­ச­ரித்­துள்ள இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் மேலும் சில பகு­தி­க­ளுக்கு முடக்க நிலை உத்­த­ரவை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

ஜாவா தீவைத் தொடர்ந்து சுமத்ரா தீவு முதல் பாப்­புவா வரை­யி­லான பெரும்­பா­லான பகு­தி­க­ளி­லும் டெல்டா வகை கிரு­மிப் பர­வல் வேக­மெ­டுத்து உள்­ள­தால், அப்

பகு­தி­க­ளி­லும் நேற்று முடக்க நிலை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இப்­ப­கு­தி­களில் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை, இந்­தோ­னீ­சி­யா­வின் கிரு­மித்­தொற்று குழு­ம­மாக உரு­வெ­டுத்­துள்ள ஜாவா தீவில் பதி­வா­கும் எண்­ணிக்­கை­யை­விட குறை­வு­தான்.

இருப்­பி­னும், அங்கு பெரி­ய­ள­வி­லான சுகா­தார கட்­ட­மைப்பு இல்­லா­த­தால், மருத்­து­வ­ம­னை­கள் ஏற்­கெ­னவே நிரம்பி வழி­யத் தொடங்கி

விட்­ட­தாக சுகா­தார அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

முடக்கநிலை கட்­டுப்­பாடு

களைத் தொடர்ந்து அத்­தி­யா­வ­சி­ய­மற்ற துறை­யைச் சேர்ந்த ஊழி­யர்­கள் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யு­மாறு கூறப்­பட்­டுள்­ள­னர். வர்த்­த­கங்­கள், உண­வ­கங்­கள் செயல்­படும் நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், ஜாவா­வில் சில மருத்­து­வ­ம­னை­கள் கார் நிறுத்­தும்

இடத்­தில் தற்­கா­லிக படுக்­கை­கள் அமைத்து சிகிச்சையளிக்­கின்­றன.

வேறு சில மருத்­து­வ­ம­னை­கள் நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க முடி­யா­மல் அவர்­க­ளைத் திருப்பி அனுப்­பி­வி­டு­கின்­றன.

ஜாவா தீவில் அலு­வ­ல­கங்­கள், பள்­ளி­வா­சல்­கள், பூங்­காக்­கள், கடைத்­தொ­கு­தி­கள், உண­வ­கங்­கள் செயல்­பட அனு­மதி மறுக்­கப்­பட்டு உள்­ளது. ஆனா­லும் உத்­த­ரவை மீறி சில வர்த்தகங்கள் செயல்­படு

­வ­தாக புகார்­கள் கூறப்­ப­டு­கின்­றன.

இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று 34,379 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர், 1,040 பேர் பலி­யா­கி­னர். தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து 3வது நாளா­க­வும் உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை தொடர்ந்து 4வது நாளா­க­வும் ஆக அதி­க­மாக பதி­வாகி வரு­கின்­றன.

நாளொன்­றுக்கு 50,000த்திற்­கும் அதி­க­மான தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கக்­கூ­டும் என்று அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் எச்­ச­ரித்­த­னர்.

இந்தோனீசியாவில் மேலும் சில பகுதிகளில் முடக்கநிலை உத்தரவு