சிட்னியில் முடக்கநிலை ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

1 mins read
42d3053f-fd66-48cf-ac76-2aa97a4d0225
-

சிட்னி: தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­ப­தால், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்­னி­யில் மேலும் ஒரு வாரத்­திற்கு முடக்க நிலை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

டெல்டா வகை கிரு­மித்­தொற்று பர­வ தொடங்­கி­ய­தை­ய­டுத்து கடந்த ஜூன் 26ஆம் தேதி இரண்டு வார காலத்­திற்கு கடு­மை­யான முடக்க நிலை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. நாளை­யோடு அது முடி­வுக்கு வர­வி­ருந்த நிலை­யில், தற்­போது ஜூலை 16 வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதோடு, விடு­முறை முடிந்து அடுத்த வாரம் பள்­ளி­கள் திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலை­யில், மாண­வர்­கள் இணையம் வழி கற்­ற­லில் ஈடு­ப­டு­வார்­கள் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

அடுத்த 24 மணி நேரத்­தில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று தான் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் சிட்னி மக்­க­ளுக்கு முதல்­வர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

நேற்று அங்கு 27 பேர் புதிய தொற்­றுக்கு ஆளா­கி­னர். இவர்­களில் 7 பேர் சமூ­க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்றனர் அதிகாரிகள்.

முத­லில், வெளி­நாட்டு விமான பணிக் குழு­வி­னரை தனது வாக­னத்­தில் அழைத்­துச் சென்ற ஓட்­டு­ந­ருக்கு மூன்று வாரங்­க­ளுக்கு முன்பு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அதன் பிறகு அங்கு 350 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.