சுகாதார அமைப்பு: மூட்டு வலி மருந்து உயிரிழப்பைத் தடுக்கிறது

1 mins read
406c47c4-06ee-40e6-a379-db54e5ab4bb7
-

சூரிச்: கீல்­வாத சிகிச்­சைக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் குறிப்­பிட்ட சில மருந்­து­கள் கொவிட்-19 தொற்­றால் ஏற்­படும் உயி­ரி­ழப்பு அபா­யத்­தைக் குறைப்­ப­தாக உலக சுகா­தார அமைப்பு கூறி­யுள்­ளது.

ரோச் நிறு­வ­னத்­தின் ஆக்­டெம்ரா, சனோஃபி தயா­ரிப்­பான கார்­டி­கோஸ்­டீ­ராய்டு கொண்ட கெவ்­ஸாரா ஆகிய இரு 'ஆர்­த­ரிட்­டிஸ்' எனும் மூட்டுவலி சிகிச்சை மருந்­து­களும் தொற்­றால் ஏற்­படும் உயி­ரி­ழப்­பைக் குறைப்­ப­தாக சுகா­தார அமைப்­பின் தர­வு­கள் கூறு­கின்­றன.

சுமார் 11,000 கொவிட்-19 நோயா­ளி­கள் உயி­ரி­ழக்­கும் அபா­யத்தை அவை தடுப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டு

உள்­ளது.

தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் இவற்­றில் ஏதா­வது ஒரு மருந்தை எடுத்­துக்­கொள்­ளும்­போது, உயி­ரி­ழப்­போர் விகி­தம் 25%லிருந்து 21%ஆக குறைந்­துள்­ள­தாக அமைப்­பின் பகுப்­பாய்வு காட்­டு­கிறது.

அதா­வது ஒவ்­வொரு 100 நோயா­ளி

­க­ளுக்­கும் மேலும் நால்வர் உயிர் பிழைக்­கும் வாய்ப்பு உள்­ளது.

அது­போல் சுவா­சக் கரு­வி­யின் உதவி தேவைப்­ப­டு­வோர் விகி­த­மும் 33%லிருந்து 26%ஆக குறைவதாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, இதைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் கொரோனா சிகிச்சை வழி­காட்­ட­லில் உலக சுகா­தார அமைப்பு மாற்­றம் செய்­துள்­ளது.