சூரிச்: கீல்வாத சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில மருந்துகள் கொவிட்-19 தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தைக் குறைப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ரோச் நிறுவனத்தின் ஆக்டெம்ரா, சனோஃபி தயாரிப்பான கார்டிகோஸ்டீராய்டு கொண்ட கெவ்ஸாரா ஆகிய இரு 'ஆர்தரிட்டிஸ்' எனும் மூட்டுவலி சிகிச்சை மருந்துகளும் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பதாக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.
சுமார் 11,000 கொவிட்-19 நோயாளிகள் உயிரிழக்கும் அபாயத்தை அவை தடுப்பதாக தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
தொற்றுக்கு ஆளானவர்கள் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை எடுத்துக்கொள்ளும்போது, உயிரிழப்போர் விகிதம் 25%லிருந்து 21%ஆக குறைந்துள்ளதாக அமைப்பின் பகுப்பாய்வு காட்டுகிறது.
அதாவது ஒவ்வொரு 100 நோயாளி
களுக்கும் மேலும் நால்வர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதுபோல் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுவோர் விகிதமும் 33%லிருந்து 26%ஆக குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதைப் பிரதிபலிக்கும் வகையில் கொரோனா சிகிச்சை வழிகாட்டலில் உலக சுகாதார அமைப்பு மாற்றம் செய்துள்ளது.

