நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இத்தாலி

1 mins read
8c2683d2-47db-4cc9-9a38-e62f91093148
-

லண்­டன்: ஆட்­டத்­தைச் சமன் செய்த ஸ்பெ­யினை பெனால்டி முறை­யில் வீழ்த்தி யூரோ காற்­பந்து தொட­ரின் இறு­திப் போட்­டிக்கு முன்­னே­றி­யுள்­ளது இத்­தாலி.

60வது நிமி­டத்­தில்­தான் ஆட்­டத்­தின் முதல் கோலே விழுந்­தது.

இத்­தாலி வீரர் கியேசா போட்ட அந்த கோலால், அக்­குழு இறு­திப் போட்­டிக்­குச் சென்­று­வி­டும் என்று தோன்­றி­யது.

ஆனால் இறு­திப் போட்­டிக்கு முன்­னேறி விட வேண்­டும் என்ற துடிப்­போடு இருந்த ஸ்பெ­யின் நிர்­வாகி, அல்­வரோ மொராட்­டாவை மாற்று ஆட்­டக்­கா­ர­ராக கள­மி­றக்­கி­னார். அதற்கு பல­னும் கிடைத்­தது. ஆனா­லும் ஸ்பெ­யி­னுக்கு என்­னவோ அதிர்ஷ்­டம் இல்லை என்­று­தான் சொல்ல வேண்­டும்.

இத்­தா­லி­யின் கோலை 80வது நிமி­டத்­தில் மொராட்டா சமன் செய்­தார். ஆட்­டம் 1-1 என்ற கோல்கணக்கில் சம­நி­லை­யில் முடிந்­தது.

எனவே வெற்றி, தோல்­வியை முடிவு செய்ய பெனால்டி முறை நடத்­தப்­பட்­டது. அப்­போது மொராட்டா கோல் போட தவ­றி­விட்­டது ஸ்பெ­யி­னின் வெற்றி வாய்ப்­பைப் பறித்­தது.

அதே சம­யம் ஸ்பெ­யின் கோல்­காப்­பா­ளர் உனாய் சைம­னைத் தாண்டி இத்­தா­லி­யின் ஜோர்­கின்யோ பந்தை வலைக்­குள் அனுப்­பி­ய­தால் 4-2 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்ற இத்­தாலி நான்­கா­வது முறை­யாக யூரோ காற்­பந்­துத் தொட­ரின் இறு­திப் போட்­டிக்கு முன்­னே­றி­யது.

வரும் திங்­கட்கிழமை வெம்­பி­ளி­வில் இறுதிப் போட்டி நடை­பெ­ற­வுள்­ளது.