'ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது'

'ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது'

1 mins read
97e09035-c21e-4eb7-bb55-4707b74f58e8
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னின் பெரும்­ப­குதி (85 விழுக்­காடு) தங்­கள் கட்­டுப்­பாட்­டின்­கீழ் இருப்­ப­தாக தலி­பான் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. ரஷ்ய தலை­ந­க­ரம் மாஸ்­கோ­வுக்­குச் சென்­றி­ருக்­கும் தலி­பான் பேரா­ளர் குழு இத்­த­க­வலை நேற்று வெளி­யிட்­டது.

ஆப்­கா­னிஸ்­தா­னைத் தள­மா­கப் பயன்­ப­டுத்தி மற்ற நாடு­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­ப­டாது என்று ரஷ்­யா­வுக்கு தலி­பான் உறுதி அளித்­தது.

அமெ­ரிக்­கப் படை­கள் ஆப்­கா­னிஸ்­தா­னிலி­ருந்து வெளி­யே­றிக் கொண்டிருக்கும் நிலை­யில், அந்­நாட்­டின் பல நக­ரங்­களை தலி­பான் கைப்­பற்றி வரு­கிறது. தலி­பா­னு­டன் சண்டை போடா­மல் ஆப்­கா­னிஸ்­தான் ராணுவ வீரர்­கள் பக்­கத்து நாடான தஜி­கிஸ்­தா­னுக்­குத் தப்­பிச் செல்­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது,

தலி­பான் ஆட்­சிக்­குப் பயந்து ஆப்­கா­னி­யர்­கள் பலர் நாட்­டை­விட்டு வெளி­யே­று­வ­தாகவும் ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

ஆப்­கா­னிஸ்­தா­னுக்­குள் ஐஎஸ் பயங்­க­ர­வா­தி­கள் நுழைந்­து­வி­டா­த­படி தமது அமைப்பு பார்த்­துக்­கொள்­ளும் என்று தலி­பான் பேரா­ளர் குழு கூறி­யது. அது­மட்­டு­மல்­லாது, ஆப்­கா­னிஸ்­தா­னில் போதைப்­பொ­ருள் உற்­பத்­தியை வேராடு அழிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அது தெரி­வித்­தது. இதற்கிடையே, எல்லைப் பகுதியில் பதற்றநிலை நிலவுவதாகவும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.