உலகளாவிய வரி சீர்திருத்தம்; வரி விகிதம் உயர்த்த திட்டம்

2 mins read
c358d2b6-0836-4c1b-9616-2c987fbad0af
-

வெனிஸ்: பன்­னாட்டு நிறு­வ­னங்

­க­ளுக்கு நியா­ய­மான வகை­யில் வரி விதிக்க வழி­வ­குக்­கும் வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க ஒப்­பந்­தத்­துக்கு ஜி20 நாடு­க­ளின் நிதி அமைச்­சர்­கள் ஒப்­ப­தல் அளிக்க இருப்­ப­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சீர்­தி­ருத்­தத்­துக்­கான கட்­ட­மைப்­பில் உள்ள பல்­வேறு அம்­சங்­களில் உல­க­ளா­விய வர்த்­தக வரி

விகி­தத்தை 15 விழுக்­கா­டாக வைத்­தி­ருப்­ப­தும் அடங்­கும்.

இதற்கு 131 நாடு­கள் இம்­மா­தம் இணக்­கம் தெரி­வித்­தன. இந்த அணு­கு­முறை 2023ஆம் ஆண்­டுக்­குள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டக்­

கூ­டும்.

முத­லீ­டு­களை ஈர்க்க குறை­வான வரி விகி­தத்தை நாடு­கள் வழங்­கு­ வ­தைத் தடுக்க இந்த சீர்­தி­ருத்தக் கட்­ட­மைப்பு இலக்கு கொண்­டுள்­ளது.

தற்­போ­தைய அணு­கு­மு­றை­யால் பல பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் மிக­வும் குறைந்த அள­வி­லான

வரி­யைச் செலுத்­து­கின்­றன.

உல­கின் ஆகப் பணக்­கார 19 நாடு­களும் ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் கலந்­து­கொண்ட மாநாடு அரிய வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக

ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் பிரெஞ்சு நிதி அமைச்­சர் புருனோ லே மைரி தெரி­வித்­தார்.

மின்­னி­லக்­கத் துறை ஜாம்­ப­வான்­க­ளுக்கு நியா­ய­மான வரியை விதிக்க ஜி20 நாடு­கள் விழை­கின்­றன.

பெரும்­பா­லான நேரங்­களில் இந்தப் பெரிய நிறு­வ­னங்­கள் மிகக் குறைந்த அள­வி­லான வரி செலுத்து ­வ­தா­க­வும் இது ஏற்க முடி­யாத ஒன்று என்­றும் திரு லே மைரி தெரி­வித்­தார்.

வரும் அக்­டோ­பர் மாதம்

இத்­தா­லிய தலை­ந­க­ரம் ரோமில் ஜி20 உச்­ச­நிலை மாநாடு நடை­பெற இருக்­கிறது.

குறைந்­த­பட்ச வரி விகி­தம் குறித்த இறுதி முடிவு அதற்கு முன் எடுக்­கப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் தற்போது இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறும் மாநாட்டில் குறைந்தபட்ச வரி விகிதம் குறித்து பெரும் அளவிலான கலந்துரையாடல் நடைபெறுகிறது.

ஒப்பந்தத்தைப் பற்றிய விவரங்கள் தெளிவான முறையில் முன்வைக்கப்பட்டு இன்னும் ஒப்புதல் தராதவர்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடுதல் வரி விகிதத்துக்கு அடிபோடும் நாடுகளில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கும்.

ஆக்ஸ்ஃபம் போன்ற ஆதரவு அமைப்புகள் வரி விகிதத்தை உயர்த்த அழைப்பு விடுத்துள்ளன.