'சிட்னியில் கொவிட்-19 பாதிப்பு மோசமடையக்கூடும்'

'சிட்னியில் கொவிட்-19 பாதிப்பு மோசமடையக்கூடும்'

1 mins read
f6a70d2a-e917-441a-b300-0abf87989b51
சிட்னியில் கொவிட்-19 பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பரிசோதனை நடத்துவதற்காகப் பல நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சிட்னியில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.படம்: இபிஏ -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் இதற்கு முன் இல்­லாத அள­வுக்கு சமூக அள­வி­லான கொவிட்-19 பாதிப்பு நேற்று அதி­க­ரித்­தது.

நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 50 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் 44

பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருந்­தது.

பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் உருமாறிய கொவிட்-19 கிருமி வகைகளில் ஒன்றான டெல்டா கிருமி வகை­யால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 489ஆக அதி­க­ரித்­துள்­ளது.

தற்­போது நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் தலை­ந­க­ரம் சிட்­னி­யில் மூன்று வார முடக்­க­நிலை நடப்­பில் உள்­ளது.

இருப்­பி­னும், அங்கு கொவிட்-19 நெருக்­க­டி­நிலை மோச­ம­டை­யக்­

கூ­டும் என சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர். கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என நேற்று உறுதி செய்­யப்­பட்ட 50 பேரில் 26 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­போது பல­ரு­டன் தொடர்­பில் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் மேலும் பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­படும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

சிட்­னி­யி­லும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் முடக்­க­நிலை

நீட்­டிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கிறது.