லண்டன் (ஏ.எஃப்.பி) - இத்தாலிக்கு எதிராக இங்கிலாந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11 ) யூரோ 2020 இறுதிப் போட்டியில் மோதவிருக்கையில் அந்நாட்டின் அரசியார் முதலாம் எலிசபெத், தமது நாட்டு அணிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
95 வயதான ராணி, இங்கிலாந்து கேப்டன் பாபி மூருக்கு உலகக் கோப்பையை வழங்கியதை நினைவுகூர்ந்தார். அப்போது 1966 இங்கிலாந்து மேற்கு ஜெர்மெனிக்கு எதிராக ஆடியது.
பழம்பெரும் ஆட்டக்காரரான பாபி மூருக்கு உலகக் கோப்பை வழங்கும் பாக்கியம் 55 ஆண்டுகளுக்கு முன்பு தமக்குக் கிட்டியதாக எலிசபெத் ராணி தெரிவித்தார்.
"இறுதிச் சுற்று வரை சென்ற இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களது வெற்றியை வரலாறு நாளை பதிவு செய்யும் என வாழ்த்துகிறேன்," என்று அவர் கூறினார்.

