தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெஸ்ஸியின் தலைமையில் முதல் அனைத்துலக கிண்ணம்

1 mins read
2a784c8d-1a53-48f9-8aad-669180ac222c
பிரேசிலை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா கிண்ணத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் அணித் தலைவர் மெஸ்ஸியுடன் (கிண்ணத்தை ஏந்தியிருப்பவர்) அர்ஜெண்டினா காற்பந்து வீரர்கள். படம்: ஏஎஃப்பி -

ரியோ டி ஜெனிரோ: பிரே­சிலை வீழ்த்­திய அர்­ஜெண்­டினா காற்­பந்து அணி, 28 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு கோப்பா அமெ­ரிக்கா கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது.

தென் அமெ­ரிக்க நாடு­கள் பங்­கேற்­கும் கோப்பா அமெ­ரிக்கா காற்­பந்­துத் தொட­ரின் இறு­திப்­போட்டி நேற்று அதி­காலை நடை­பெற்­றது.

இதில் நடப்பு வெற்­றி­யா­ள­ரான பிரே­சிலை, நட்­சத்­திர வீரர் லயனல் மெஸ்ஸி தலை­மை­யி­லான அர்ஜெண்­டினா எதிர்­கொண்­டது.

ஆட்­டத்­தின் 22வது நிமி­டத்­தில் அர்­ஜெண்­டினா அணி வீரர் ஏங்­கல் டி மரியா கோல் போட, அர்­ஜெண்­டினா முன்­னிலை பெற்­றது.

அதைச் சமன் செய்ய பிரே­சில் அணி எடுத்த எந்த முயற்­சிக்­கும் பலன் கிடைக்­க­வில்லை.

நெய்­மார் உள்­ளிட்ட நட்­சத்­திர வீரர்­க­ளின் முயற்­சி­க­ளுக்கு அர்­ஜெண்­டினா வீரர்­கள் முட்­டுக்­கட்டை போட்­ட­னர். ஐந்து தாக்­கு­தல் வீரர்­கள் இருந்­தும் பிரே­சி­லால் ஒரு கோல்­கூட போட முடி­ய­வில்லை.

இத­னால், 1-0 என்ற கோல் கணக்­கில் அர்­ஜெண்­டினா அணி வெற்றி பெற்று கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யது.

அந்த அணி கடை­சி­யாக 1993ஆம் ஆண்டு இக்­கிண்­ணத்தை வென்­றி­ருந்­தது.

அர்­ஜெண்­டி­னா­விற்கு மட்­டு­மல்ல, அதன் நட்­சத்­திர வீரர் மெஸ்­ஸிக்­கும் இது முக்­கிய வெற்­றி­யா­கும். ஏனெ­னில் குழுக்களுக்கு இடையிலான போட்­டி­யில் மட்­டுமே கிண்­ணங்­கள் வென்­றி­ருந்த மெஸ்ஸிக்கு அனைத்­து­ல­கப் போட்­டி­யில் கிண்­ணம் வெல்­வது இதுவே முதன்­மு­றை­யா­கும்.

ஆனால் நேற்­றையை போட்­டி­யில், ஆட்­டம் முடிய இரண்டு நிமி­டங்­கள் இருந்­த­போது கோல் போட கிடைத்த பொன்­னான வாய்ப்­பை மெஸ்ஸி தவ­ற­விட்­டு­விட்­டார்.