சிட்னியில் கொவிட்-19 சூழல் மோசமடைகிறது

சிட்னியில் கொவிட்-19 சூழல் மோசமடைகிறது

1 mins read
936f8770-f197-43d8-8c62-0cdf9e3661a2
-

சிட்னி: கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடர்ந்து மோச­ம­டை­வ­தையொட்டி ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் முடக்­க­நிலை நீட்­டிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அங்கு தொடர்ந்து இந்த ஆண்டில் இது­வரை காணாத அள­வில் புதி­தாக கொவிட்-19 தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை பதி­வா­கி­வ­ரு­கிறது.

கொவிட்-19 டெல்டா வகை கிரு­மிப் பர­வல் அதற்­குக் கார­ணம். எனி­னும், சமூக அள­வில் புதி­தாக கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் குறைந்­தது.

அது, நம்­பிக்கை அளிக்­கும் ஓர் அம்­சம் எனக் கரு­தப்­ப­டு­கிறது. வரும் நாட்­களில் பதி­வா­கும் எண்­ணிக்­கை­யைக் கருத்­திற்­கொண்டு முடக்­க­நி­லையை நீட்­டிப்­பது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் முதலமைச்சர் கிளே­டிஸ் பெரே­ஜிக்­லி­யேன் குறிப்­பிட்­டார்.

சிட்­னி­யில் தற்­போ­தைய முடக்­க­நிலை வரும் வெள்­ளிக்­கி­ழமை வரை நடப்­பில் இருக்­கும். அதன்படி­பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன, வீட்­டில் இருக்­கும்­படி பல­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அத­னால் பொரு­ளி­யல் மந்­த­மடை­யக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வி­யுள்­ளது.

பல வளர்ந்த நாடு­களைக் காட்­டி­லும் ஆஸ்­தி­ரே­லியா கொவிட்-19 சூழலை ஓர­ளவு நன்கு கையாண்­டுள்­ளது. எனி­னும், அந்­நாட்­டில் போது­மா­னோ­ருக்­குத் தடுப்­பூ­சி­கள் போடப்­ப­ட­வில்லை என்­றும் குறை­கூ­றப்­ப­டு­கிறது.