பலரது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி கிண்ணத்தைக் கைப்பற்றியது இத்தாலி

2 mins read
78121f8f-7673-449d-b0ed-555beb499613
இங்­கி­லாந்­தின் புக்காயோ சாக்­கா­விற்கு ஆறு­தல் அளிக்­கி­றார் பயிற்­று­விப்­பா­ளர் கேரத் சவுத்­கேட். படம்: ராய்ட்­டர்ஸ் -

லண்­டன்: முன்­னாள் காற்­பந்து வீரர்­கள், கவ­னிப்­பா­ளர்­கள் உள்­ளிட்­டோ­ரின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மாறாக யூரோ 2020 கிண்­ணத்தை வென்­றுள்­ளது இத்­தாலி.

கடந்த உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெ­றா­மல் போன இத்­தாலிய அணி, மூன்றே ஆண்­டு­களில் காற்­பந்து உலகை மீண்­டும் தன்­னைத் திரும்­பிப் பார்க்­க­வைத்­துள்­ளது.

கடந்த மூன்றாண்டுகளில், அதி­லும் குறிப்­பா­கக் கடந்த 50 நாட்­களில், தனது அணி­யின் கடின உழைப்­பிற்­குப் பலன் கிடைத்­ததை நினைத்து இறு­தி­யாட்­டம் முடிந்­த­வு­டன் தான் ஆனந்­தக் கண்­ணீர் வடித்­த­தாக இத்­தா­லி­யின் பயிற்றுவிப்­பா­ளர் ரோபர்ட்டோ மன்­சினி தெரி­வித்­தார்.

விளை­யாட்­டா­ளர்­க­ளி­டையே வளர்ந்­துள்ள குழு உணர்வு வெற்­றிக்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­ததாக அவர் பெரு­மைப்­பட்­டார்.

இறு­தி­யாட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தது. கூடு­தல் நேரத்­தின் முடி­வில் பெனால்­டி­களில் இத்­தாலி இங்­கி­லாந்தை 3-2 எனும் கோல் கணக்­கில் வென்­றது. இங்­கி­லாந்­தின் மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்ட், ஜேடன் சாஞ்சோ, புக்­காயோ சாக்கா ஆகி­யோர் பெனால்­டி­களை கோலாக்­கத் தவ­றி­னர்.

விளை­யாட்­டா­ளர்­க­ளைக் குறை­சொல்­லக்­கூ­டாது, பெனால்­டி­களை யார் எடுப்­பது என்ற முடிவு தன்­னு­டை­யது, அது தான் செய்த தவறு என்று இங்­கி­லாந்­தின் பயிற்­று­விப்­பா­ளர் கேரத் சவுத்­கேட் கூறி­னார். வெற்றி, தோல்வி இரண்­டை­யும் குழு­வாக ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

19 வய­தான சாக்­காவை இங்­கி­லாந்­தின் ஐந்­தா­வது பெனால்­டியை எடுக்­கச் சொன்­னது அணி­யின் மூத்த விளை­யாட்­டா­ளர்­கள் சில­ரின் தவறு என்று மான்­செஸ்­டர் யுனைடெட் குழு­வின் முன்­னாள் அணித் தலை­வர் ரோய் கீன் கூறினார்.

இங்­கி­லாந்­தி­டம் சிறந்த முன்­னிலை விளை­யாட்­டா­ளர்­கள் இருப்­ப­தால் வருங்­கா­லத்­தில் முன்­னிலை ஆட்­டத்­தில் கூடு­தல் கவ­னம் செலுத்தி, எதி­ர­ணி­யைத் திக்­கு­முக்­கா­டச் செய்­வ­தில் அணி அக்­கறை காட்­ட­லாம் என்று முன்­னாள் இங்­கி­லாந்து வீரர் கேரி லினெக்­கர் கருத்­து­ரைத்­தார்.

இறு­தி­யாட்­டத்­தில் தோல்­வி­யுற்­றா­லும் இங்­கி­லாந்து இந்­தப் போட்­டி­யில் சிறப்­பா­கச் செய்­த­தைப் பல தரப்­பி­னர் சுட்­டி­னர்.

பெனால்­டி­களை கோலாக்­கத் தவ­றி­ய­தைத் தொடர்ந்து ரேஷ்­ஃபர்ட், சாஞ்சோ, சாக்கா மூவ­ரும் இணை­யம்­வழி இன ரீதி­யா­கத் தூற்­றப்­பட்­ட­னர். இங்­கி­லாந்து காற்­பந்­துச் சங்­கம் அதை வன்­மை­யா­கக் கண்­டித்­தது. அணி­யைப் பாராட்­டிய பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­ச­னும் அந்­தச் செய­லைக் கண்­டித்­துப் பேசி­னார்.

மேலும், ஆட்­டம் அரங்­கே­றிய வெம்­பிளி விளை­யாட்­ட­ரங்­கிற்­குள் சில ரசி­கர்­கள் அத்­து­மீறி நுழைய முயற்சி செய்­ததை அதி­கா­ரி­கள் உறு­தி­செய்­த­னர்.

ரசி­கர்­க­ளுக்­கி­டையே வன்­முறை வெடித்­த­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது. 55 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக அனைத்­து­ல­கப் போட்டி ஒன்­றின் இறு­தி­யாட்­டத்­திற்­குச் சென்ற இங்­கி­லாந்து, கிண்­ணத்தை வெல்­லுமா என்­ப­து­தான் அதி­கம் பேசப்­பட்­டது. கிண்­ணத்தை வென்­றதோ 53 ஆண்­டு­க­ளாக யூரோ கிண்­ணத்தை வெல்­லா­தி­ருந்த இத்­தாலி.

யூரோ 2020 வெற்­றி­யின் மூலம் 2018ஆம் ஆண்­டில் ஏற்­பட்ட துய­ரம் மறைந்து, ஒளி­ம­ய­மான எதிர்­காலம் பிறந்­துள்ளது உத்­தே­வகத்­து­டன் விளை­யா­டிய இத்­தா­லிக்கு!