சீனாவில் இடிந்து விழுந்த கட்டடம் - 8 பேர் பலி

சீனாவில் இடிந்து விழுந்த கட்டடம் - 8 பேர் பலி

1 mins read
b344728c-37a9-4cad-97cd-37d01438a0f2
-

சீனாவின் கிழக்குப் பகுதியில் சிறிய ஹோட்டல் ஒன்றின் துணைக்கட்டடம் திடீரென விழுந்து தரைமட்டமானதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒன்பது பேர் காணவில்லை.

திங்கட்கிழமை பிற்பகலில் விழுந்த அந்த ஹோட்டலின் சிதைவுகளிலிருந்து மேலும் அறுவர் காப்பாற்றப்பட்டதாக வூஜியாங் மாவட்ட அரசாங்கம் தனது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட கட்டடப் புதுப்பிப்பு பணி ஒன்று இதற்குக் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த 'சீஜி காயுவென்' விடுதியில் விருந்தினர்கள் தங்குவதற்காக 54 அறைகள் உள்ளதாக சிட்ரிப் இணையத்தளம் குறிப்பிடுகிறது.