ஈராக் தீ விபத்தில் 52 பேர் பலி

ஈராக் தீ விபத்தில் 52 பேர் பலி

1 mins read
14e43512-0704-40b3-aa75-d28d96fa0248
-

நஸ்­ஸி­ரியா (ஈராக்): ஈராக்­கின் தெற்­குப் பகு­தி­யில் உள்ள நஸ்­ஸி­ரியா நக­ரத்­தில் உள்ள கொரோனா தொற்று மருத்­து­வ­ம­னை­யில் நேற்று தீ பற்­றி­யது. உயிர்வாயு சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட இந்த விபத்­தில் 44 பேர் பலி­யா­யி­னர். கிட்­டத்­தட்ட 22 பேர் தீக்­கா­யங்­க­ளுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இதனை நஸ்­ஸி­ரியா நக­ரின் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­களும் போலிஸ் அதி­கா­ரி­களும் தெரி­வித்­த­னர்.

புகை­யால் சூழப்­பட்ட அந்த மருத்­து­வ­ம­னைக் கட்­ட­டத்­தில் மேலும் உடல்­கள் கிடைக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது. தீய­ணைப்­புப் படை­யி­னர் உள்­ளிட்ட மீட்­புப்­படை­யி­னர் மீட்­புப்­ப­ணி­யில் ஈடு­பட்டு வருகின்றனர். அந்­நாட்டு பிர­த­மர் முஸ்­தபா அல்-கதிமி அந்­நாட்டு அமைச்­சர்­க­ளு­டன் அவ­ச­ரச் சந்­திப்­புக் கூட்­டம் ஒன்­றைக் கூட்டி இந்­தத் துய­ரச்­சம்­ப­வத்­திற்­கான கார­ணம் குறித்­துப் பேசி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அந்த மருத்­து­வ­மனை நிர்­வாகி, பணி­யில் இருந்து இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தோடு கைது செய்­யப்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. மருத்­து­வ­ம­னை­யில் கொழுந்­து­விட்டு எரிந்த தீயைக் கட்­டுக்­குள் கொண்­டு­வந்­தா­லும் இன்­னும் புகை மண்­ட­ல­மா­கக் காட்சி தரும் அங்கு சிக்­கி­யுள்­ளோரை மீட்­கும் பணி தொடர்­வ­தாக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

போர் மற்­றும் வர்த்­த­கத் தடை போன்­ற­வற்­றால் ஈராக் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க சுகா­தா­ரத்­து­றை­யி­டம் போது­மான வச­தி­கள் இல்லை. ஈராக்கில் தொற்­றுப் பாதிப்­புக்கு இது­வரை 17,592 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். 1.4 மில்­லி­யன் பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.