இங்கிலாந்து வீரர்கள் மீதான இனரீதியான தூற்றுதல்களுக்கு சமூக ஊடகங்களும் தலைவர்களும் கண்டனம்

இங்கிலாந்து வீரர்கள் மீதான இனரீதியான தூற்றுதல்களுக்கு சமூக ஊடகங்களும் தலைவர்களும் கண்டனம்

1 mins read
9714edcb-8ea4-41b0-98cb-9b8c0644b2c4
இங்கிலாந்து காற்பந்துவீரர் மார்கஸ் ரேஷ்ஃபர்ட்டை பாராட்டும் வகையில் வித்திங்டன் நகரில் அவருக்கு ஆதரவாக ஏராளமான காற்பந்து ரசிகர்கள் வாழ்த்து அட்டைகளுடன்கூடிய மாபெரும் பதாகை ஒன்றை வைத்து வாழ்த்துத்தெரிவித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த யூரோ 2020 இறு­திக் காற்­பந்­துப்­போட்­டி­யில் யூரோ கிண்­ணத்தை இத்­தாலி வென்­ற­தை­ய­டுத்து, ஆட்­டம் நடை­பெற்ற வெம்­பிளி விளை­யாட்­ட­ரங்­கிற்­குள் காற்­பந்து ரசி­கர்­கள் சிலர் அத்­து­மீறி நுழைந்து வன்­மு­றைச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­னர். அதே­போல் விளை­யாட்­ட­ரங்­கிற்கு வெளி­யே­யும் ரசி­கர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் மோதிக்­கொண்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வத்­திற்கு இங்­கி­லாந்து காற்­பந்­துச் சங்­க­மும் இங்­கி­லாந்­தின் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் உள்­ளிட்ட அர­சி­யல் தலை­வர்­களும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். இந்­நி­லை­யில் ஃபேஸ்புக், டுவிட்­டர் உள்­ளிட்ட சமூக ஊட­கங்­கள், காற்­பந்து தொடர்­பாக காற்­பந்து ரசி­கர்­கள் இங்­கி­லாந்து காற்­பந்து வீரர்­கள் குறித்து இன­ரீ­தி­யான கருத்­து­க­ளைத் தெரி­வித்­தால் அது உட­ன­டி­யாக நீக்­கப்­படும் என்று அறி­வித்­துள்­ளது.

மார்­கஸ் ரேஷ்­ஃபர்ட், ஜேடோன் சஞ்சோ மற்­றும் புகாயோ சாகா ஆகிய மூன்று இங்­கி­லாந்து வீரர்­கள்­தான் பெனால்­டி­களை கோலாக்­கத் தவ­றி­னர் என்று அவர்­களை இன­ரீ­தி­யாக இன்ஸ்­ட­கி­ராம் சமூக ஊட­கத்­தில் ரசி­கர்­கள் தூற்­றி­னர்.

அத­னை­ய­டுத்து சமூக ஊட­கங்­கள், இன­ரீ­தி­யாகச் சாடும் கருத்­து­களை ஒரு­போ­தும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என்று எச்­ச­ரித்­துள்­ளன. இன­ரீ­தி­யான கருத்­து­க­ளுக்கு டுவிட்­டர், ஃபேஸ்புக் தளங்­களில் இட­மில்லை என்று அந்த ஊட­கங்­க­ளின் சான் பிரான்­சிஸ்­கோ­வுக்­கான பேச்­சா­ளர் தெரிவித்துள்ளார். தானி­யங்கி மென்­பொ­ரு­ளின் உத­வி­யு­டன் கடந்த 24 மணி நேரத்­தில் டுவிட்­ட­ரில் பதி­வி­டப்­பட்ட ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட இன­ரீதி­யாகச் சாடும் கருத்துகளைக் கொண்ட பதி­வு­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதுபோன்ற கருத்துகளை பதிவிட்ட பல­ரின் கணக்­கு­கள் நிரந்­த­ர­மா­கத் தடை­செய்­யப்­பட்­ட­தா­க­வும் அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.