மலேசியா: புதிதாக 11,618 பேருக்கு கொவிட்-19

மலேசியா: புதிதாக 11,618 பேருக்கு கொவிட்-19

1 mins read
a3966f1e-c73a-42fb-a5c0-f2095f47c5c5
-

மலேசியாவில் புதிதாக 11, 618 பேருக்கு கொரோனா கிருமி ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் அங்குள்ள மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 867, 567 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கு டெல்ட்டா கிருமி வகை முக்கிய காரணம் என்று மலேசியாவின் சுகாதாரத்துறைக்கான தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "தற்போது பரவிவரும் கொவிட்-19 கிருமி வகைகளில் டெல்ட்டா வகை ஆக வேகமாகப் பரவி வருகிறது," என்று அவர் செய்தியாளர் கூட்டத்திடம் தெரிவித்தார்.

கிருமித்தொற்று எண்ணிக்கை மிதமாகும் வரை அடுத்த இரண்டு வாரங்கள் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.