முடக்கநிலை நீட்டிப்பு

முடக்கநிலை நீட்டிப்பு

1 mins read
b51cf692-548d-4427-9c73-92d52c66b4b2
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் அங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்

பட்­டுள்ள முடக்­க­நிலை குறைந்­தது மேலும் இரண்டு வாரங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

சிட்­னி­யில் விதிக்­கப்­பட்­டுள்ள முடக்­க­நிலை நாளை­யு­டன் முடி­வுக்கு வரு­வ­தாக இருந்­தது. ஆனால் இம்­மா­தம் 30ஆம் தேதி­வரை அது நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

நடப்­பில் உள்ள கட்­டுப்­பா­டு­களை மேலும் கடு­மை­யாக்க அழைப்பு விடுக்­கப்­பட்­டது. ஆனால் நியூ சவுத் வேல்ஸ் முதல்­வர் கிளா­டிஸ் பெரி­ஜிக்­லி­யன் அதை ஏற்க மறுத்­து­விட்­டார். கடந்த மூன்று வாரங்­க­ளாக சிட்­னி­யில் முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்

பட்­டுள்­ளது. வேக­மா­கப் பர­வி­வ­ரும் டெல்டா கொவிட்-19 கிருமி வகை­யைக் கட்­டுப்­ப­டுத்த சிட்னி

சிர­மப்­ப­டு­கிறது. நேற்­றைய நில­வ­ரப்­படி புதி­தாக 97 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தி­னம் 89 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்­பட்­டது. சமூக அள­வி­லான பாதிப்பு இல்­லா­மல் இருக்க ஆஸ்­தி­ரே­லியா இலக்கு கொண்­டுள்­ளது.

சமூ­கத்­தைப் பாது­காப்­பு­டன் வைத்­தி­ருக்க முடக்­க­நிலை

அவ­சி­யம் என திரு­வாட்டி

பெரி­ஜிக்­லி­யன் கூறி­னார்.