பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினுக்கு அந்நாட்டு அமைச்சர்கள் அனை
வரும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்களில் அம்னோவைச் சேர்ந்த ஒன்பது பேரும் அடங்குவர். மலேசியாவில் கொவிட்-19 சூழல் மோசமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் நாட்டைத் திரு முகைதீன் வழிநடத்த வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைவரின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் முடிவுகளை எடுக்கும் என்று அமைச்சர்கள் நேற்று உறுதி அளித்தனர். கொவிட்-19
நெருக்கடிநிலையிலிருந்து மலேசியா மீண்டு வருவதே
முக்கிய இலக்கு என்று அவர்கள் கூறினார்.
ஆளும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து அம்னோ விலகுவதாக அதன் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி அண்மையில் அறிவித்தார்.
ஆனால் அம்னோ அமைச்சர் கள் திரு முகைதீனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைக் காட்டு
வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். திரு முகைதீன் பிரதமராக நீடிக்க அம்னோ அமைச்சர்களின் ஆதரவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

