ஹவானா: கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது அரிது.
இந்நிலையில், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்கள், மின்சாரம் ஆகியவற்றுக்கான தட்டுப்பாட்டை எதிர்த்துக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் கியூபாவில் பேரணி நடத்தினர்.
கடந்த திங்கட்கிழமையன்று நடத்தப்பட்ட பேரணியின்போது ஆடவர் ஒருவர் மாண்டார். பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் காயமுற்றனர்.
இதற்கிடையே, இணையச் சேவை, சமூக ஊடகம் முடக்கப்பட்டுள்ளது.

