கிருமித்தொற்று: கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் பயிற்சி மையம் மூடப்பட்டது

1 mins read
10913549-f7c0-41af-abdc-3451d2c53a30
-

உபியில் அமைந்துள்ள கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் பயிற்சி மையமும் கோவன், தெம்பனிஸ் வட்டாரங்களில் இருக்கும் அதன் கிளை அலுவலகமும் சேவை முனைகளும் இம்மாதம் 29ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும்.

"எங்களது ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நால்வருக்கும் தொடர்பிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு எங்களது செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது," என்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் தலைமைத் தொடர்பு அதிகாரி டேமி டான் கூறினார்.

நாளை (ஜூலை 16) மாலை 4.25 மணியிலிருந்து 29ஆம் தேதிவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எழுத்து, செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கான கட்டணங்கள் திருப்பித் தரப்படும் என்றும் ஃபேஸ்புக் வழியாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.