தடுப்பூசி போடாதவர்களுக்கு தடை

தடுப்பூசி போடாதவர்களுக்கு தடை

1 mins read
c86517c6-ea4c-4d85-bc33-9982584e50cb
-

பெய்­ஜிங்: சீனா­வில் இனி கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளா­த­வர்­கள் பள்­ளி­கள், மருத்­து­வ­ம­னை­கள், கடைத்­தொ­கு­தி­கள் உள்­ளிட்ட பொது இடங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­குத் தடை விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

2019ஆம் ஆண்­டின் இறு­தி­வாக்­கில் முத­லில் சீனா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது. ஆனால்

கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளால் அங்கு கிரு­மித்­தொற்று கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.

டெல்டா வகை கிரு­மித்­

தொற்று அச்சம் காரணமாக இந்தத் தடை கொண்டு வரப்­

ப­டவுள்ளது. இத்தடை நாட்­டின் 2ஆம் நிலை நக­ரங்­களில் முத­லில் விதிக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில், நாடு முழு­வ­தும் இத்­தடை விதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாக பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த ஆண்­டின் இறு­திக்­குள் தனது 1.4 பில்­லி­யன் மக்­கள்­

தொ­கை­யில் 64 விழுக்­காட்­டி­

ன­ருக்­குத் தடுப்­பூசி போடு­வ­தற்­கான இலக்­கைக் கொண்­டுள்­ளது சீனாவில் இந்த புதிய நடை­முறை, அதி­க­மா­னோரைத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தூண்டும்.