பாரிஸ்: இத்தாலிய காற்பந்து அணியின் கோல்காப்பாளர் கியான்லூகி டோனாரும்மா ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவில் இணைந்துள்ளார்.
யூரோ 2020 இறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பில் இங்கிலாந்தின் இரண்டு கோல் முயற்சி
களைத் தடுத்து, இத்தாலி கிண்ணத்தைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் டோனாரும்மா.
இவர், இதுவரை 215 சிரி ஏ, 16 யூரோப்பா லீக் மற்றும் 12 இத்தாலிய கிண்ணப் போட்டிகளிலும் விளையாடிவுள்ளார்.
ஏசி மிலான் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வந்த இவர், இலவசமாக பிஎஸ்ஜி குழுவிற்குச் சென்றுள்ளார்.
ஆனால், ஏற்கெனவே பிஎஸ்ஜி குழுவின் கோல்காப்பாளரான கெய்லர் நவாஸுக்கு இவருக்கும் இடையே போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
இந்த பருவத்தில் பிஎஸ்ஜி குழு இலவசமாக வாங்கியுள்ள மூன்றாவது ஆட்டக்காரர் இவர்.
ஏற்கெனவே ஸ்பானிய வீரர் செர்ஜியோ ரமோஸ், லிவர்பூலின் ஜெர்ஜினியோ வைன்ஹால்டம் ஆகிய இருவரையும் அக்குழு
வாங்கியிருந்தது.